தமிழக அமைச்சரவையில் 2 காங்கிரஸ் அமைச்சர்கள்! நாளை மறுநாள் பதவியேற்பு?
தமிழகத்தில் நாளை மறுநாள் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து...
தமிழ்நாடு அமைச்சரவை நாளை மறுநாள் விரிவாக்கம் செய்ய உள்ளதாகவும் காங்கிரஸுக்கு அதில் இரண்டு அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
கடந்த மே 10 ஆம் தேதி சி. ஜோசப் விஜய் முதல்வராகவும், அவருடன் ஒன்பது பேரவை உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். ஆனால், அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு பதவியேற்ற சில நாள்கள் கழித்து, கடந்த மே 16 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், போக்குவரத்துத் துறை, உயர்க் கல்வித் துறை, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை, வேளாண் துறை, பால்வளத் துறை, மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை போன்ற பல்வேறு முக்கியமான துறைகளுக்கு அமைச்சர்கள் ஒதுக்கப்படாமல் உள்ளன.
இதனைத் தொடர்ந்து, நாளை மறுநாள் அமைச்சரவைக் கூட்டப்படலாம், மீதமுள்ள துறைகளுக்கான அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்றும் அதில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இது உறுதிசெய்யப்படவில்லை.
இதன்மூலம், தமிழக அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Reports indicate that the Tamil Nadu Cabinet is set to be expanded the day after tomorrow, and that two ministerial berths have been allotted to the Congress party.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.