தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!
தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாவதாக பாடப்பட்டது பற்றி...
தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில் மீண்டும் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மூன்றாவதாக இசைக்கப்பட்டுள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த மே 10 ஆம் தேதி முதல்வர் சி. ஜோசப் விஜய் பதவியேற்ற போது, தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் மூன்றாவதாக இசைக்கப்பட்டது சர்ச்சையானது.
வழக்கமாக, தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்கப்படும். நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது.
Advertisement
Advertisement
ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக இசைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கூட்டணிக் கட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் முதலில் இசைக்கப்படும், இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில் மீண்டும் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மூன்றாவதாக இசைக்கப்பட்டுள்ளது.
மேடையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இருந்த நிலையில், முதலில் வந்தே மாதரமும், இரண்டாவது தேசிய கீதமும் பாடப்பட்டது. இறுதியாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.
அரசு விழாக்களில் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு தெரிவித்திருந்தபோதிலும், தமிழ்நாட்டில் வழக்கமான மரபு பின்பற்றப்பட்டுவந்தது.
இந்த நிலையில், தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற இரண்டு ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு மூன்றாவது இடம் அளிக்கப்பட்டது பேசுபொருளாகியுள்ளது.