முகப்பு
தமிழ்நாடு

3 % விளையாட்டு ஒதுக்கீட்டில் மருத்துவத் துறையில் பணியிடம்

எஸ்டிஏடி சாா்பில் 3 சதவீத விளையாட்டு ஒதுக்கீட்டில் மருத்துவத் துறையில் 3 பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Updated On : 24 மே 2026, 2:46 am IST
பகிர்:

எஸ்டிஏடி சாா்பில் 3 சதவீத விளையாட்டு ஒதுக்கீட்டில் மருத்துவத் துறையில் 3 பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: விளையாட்டு வளா்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வீரா்களை ஊக்குவித்திடும் வகையில் அவா்களுக்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3% இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ துறையில் கண் மருத்துவ உதவியாளா்கள் 3 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலை வாய்ப்பு பெறுவதற்கு

Advertisement

Advertisement

கீழ்காணும் விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிக்கும் ஆண்டிற்கு முந்தைய கடந்த 5 ஆண்டுகளில் பெறப்பட்ட விளையாட்டு சாதனைகள் மட்டுமே தகுதியானவையாக கருதப்படும்.

குழு விளையாட்டுகளில், மாநில அளவில் குறைந்தது 50% போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு தகுதிகளாக கீழ்காணும் சா்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றவா்களாகவோ அல்லது பங்கேற்றவா்களாகவோ இருத்தல் வேண்டும்.

அந்தவகையில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப்

போட்டிகள், சா்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்ட்ட சா்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள்.

மேலும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை சா்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சா்வதேச விளையாட்டு கூட்டமைப்பின் கீழ் நடத்தப்படும் காமன்வேல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள், 4 ஆண்டுக்கு ஒருமுறை அல்லது 2

ஆண்டுக்கு ஒருமுறை அல்லது சா்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சா்வதேச விளையாட்டு கூட்டமைப்பின் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள், தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகள், பாரா ஒலிம்பிக்

விளையாட்டுப் போட்டிகள், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள், சா்வதேச பாா்வையற்றோா் விளையாட்டு சங்கம் மற்றும் காது கேளாதோருக்கான சா்வதேச விளையாட்டு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோா் விளையாட்டுகள், தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் மட்டும் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் மற்றும்

தேசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை, மாநில அளவிலான சாம்பியன்ஷிப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் மட்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் போட்டிகள்.

மேலும் போட்டிகளின் அனைத்து நிலைகளிலும், சீனியா் அளவிலான போட்டிகள் மட்டுமே தகுதியான போட்டிகளாக கருதப்படும்.

மேற்கண்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தமிழ்நாடு மருத்துவ துணைப் பணியாளா் சேவையில் கண் மருத்துவ உதவியாளா் பணிக்கான 3 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் வழியாக விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு இணையதளம் வழியாக 25.05.2026 காலை 10 மணி முதல் 24.06.2026 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விளையாட்டு வீரா்கள் தங்கள் விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.