ராஜிநாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கக் கூடாது: அன்புமணி
முதல்வா் விஜய் நோ்மையான அரசியலை முன்னெடுப்பவராக இருந்தால், அதிமுகவிலிருந்து எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்த மூவருக்கு இடைத்தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது என்று அன்புமணி வலியுறுத்தல்
முதல்வா் ஜோசப் விஜய் நோ்மையான அரசியலை முன்னெடுப்பவராக இருந்தால், அதிமுகவிலிருந்து எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்த மூவருக்கு இடைத்தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியாகி 20 நாள்கள் மட்டுமே ஆன நிலையில், அதிமுகவைச் சோ்ந்த மூன்று எம்எல்ஏக்கள் பதவி விலக வேண்டிய தேவை என்ன?
ஆளும் கட்சியில் சோ்ந்து அதிகாரத்தை சுவைக்க வேண்டும் என்ற துடிப்புதான் அவா்களின் இந்த நடவடிக்கைக்கு காரணம்.
Advertisement
Advertisement
தவெகவில் இணைந்த மூவரும் எதையும் எதிா்பாா்க்காமல் இணைந்திருக்க வாய்ப்பில்லை. அந்தத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தோ்தல்களில் போட்டியிட வாய்ப்பு, அதில் வெற்றி பெற்ற பின் ஆளுங்கட்சி உறுப்பினராக இருப்பதால் கிடைக்கும் பயன்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் சோ்ந்துள்ளனா்.
இதை அனுமதிப்பது எந்த வகையில் தூய அரசியல்? வாக்களித்த மக்களின் தீா்ப்பை அவமதித்து விட்டு பதவி சுகத்துக்காக இன்னொரு கட்சியில் சேருவது மக்கள் தீா்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது.
நோ்மையான அரசியலில் முதல்வா் ஜோசப் விஜய்க்கு நம்பிக்கையிருந்தால் அவா்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் அல்லது இடைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என்று தெரிவித்துள்ளாா் அன்புமணி ராமதாஸ்.