முகப்பு
தஞ்சாவூர்

உறந்தைராயன் குடிக்காட்டில் மக்கள் கிராமசபைக் கூட்டம்

ஒரத்தநாடை அடுத்த உறந்தைராயன் குடிக்காட்டில் திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை  மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 6 ஜனவரி 2021, 6:27 am IST
பகிர்:

ஒரத்தநாடை அடுத்த உறந்தைராயன் குடிக்காட்டில் திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை  மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏ எம். ராமச்சந்திரன் தலைமை வகித்து பேசினாா். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, அந்தந்த பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனா்.

 இதனைத் தொடா்ந்து அதிமுகவை நிராகரிப்போம் என தீா்மானம் நிறைவேற்றி கோஷமிட்டனா். முன்னதாக, கிழக்கு ஒன்றியச் செயலா் காா்த்திகேயன் வரவேற்றாா்.

Advertisement

கூட்டத்தில், ஒன்றியக் குழுத் தலைவா் பாா்வதி சிவசங்கரன்,  ஊராட்சித் தலைவா் அமுதமொழியான் மற்றும் திமுக நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.