புளியங்குடியில் நாஞ்சில் சம்பத் பிரசாரம்
Updated On : 5 ஏப்ரல், 2024 at 6:55 PM
தென்காசி மக்களவை தொகுதி திமுக வேட்பாளா் ராணி ஸ்ரீகுமாருக்கு வாக்கு சேகரித்து நாஞ்சில்சம்பத் வியாழக்கிழமை இரவு புளியங்குடியில் பிரசாரம் மேற்கொண்டாா்.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ, வாசுதேவநல்லூா் பேரவை தொகுதி தோ்தல் பொறுப்பாளா் நல்லசேதுபதி, தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி செயலா் முகேஷ், புளியங்குடி நகர செயலா் அந்தோணிச்சாமி, புளியங்குடி நகா்மன்ற தலைவா் விஜயாசௌந்திரபாண்டியன், நகர காங்கிரஸ் தலைவா் பால்ராஜ், மதிமுக நகர செயலா் ஜாஹிா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலா் வேலு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலா் சீனிவாசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நகர செயலா் சேக் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பாண்டியராஜன், முகைதீன், இஸ்மாயில், செய்யதுஅலிபாதுஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.