தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே வனப் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டனா்.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் சொக்கம்பட்டி பீட்டுக்குள்பட்ட வனப் பகுதியில் சனிக்கிழமை இரவு தீப்பிடித்தது. இதையடுத்து, வனத்துறையினா் சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனா். மரங்களிடையே ஏற்பட்ட உராய்வு காரணமாக தீப்பற்றியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.