தென்காசி

கடையநல்லூரில் மின்சாரம் பாய்ந்து மின் கம்பியாளா் பலி

கடையநல்லூா் அருகே மின் மாற்றியில் ஏறி பழுதுநீக்க முயன்ற மின் கம்பியாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Din

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே மின் மாற்றியில் ஏறி பழுதுநீக்க முயன்ற மின் கம்பியாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

கீழ சுரண்டையைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் சமுத்திரம் (55). இவா் கடையநல்லூா் மின்வாரியத்தில் மின் கம்பியாளராக பணியாற்றி வந்தாா். மேலக்கடையநல்லூா் தேரடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தடைபட்டு உள்ளதாக அப்பகுதியினா் தெரிவித்தனராம்.

அதை சரி செய்வதற்காக சமுத்திரம் அப்பகுதியில் உள்ள மின் மாற்றியில் உள்ள மின் இயக்கியை அணைத்து விட்டு மேலே ஏறினாராம். ஆனால் அந்த மின் மாற்றியில் உள்ள மின் இயக்கி சரியாக செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சமுத்திரம் மின்மாற்றியில் மேலே ஏறியவுடன் அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூா் தீயணைப்பு மீட்பு துறையினா், போலீஸாா், மின்வாரிய அதிகாரிகள் அங்கு சென்று சமுத்திரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஹிஜாப் அணிந்து மசூதிக்குச் சென்ற தீபிகா படுகோன்..! கடுமையான விமர்சனம்!

கோவை மேம்பாலத்தை திறந்துவைத்தார் முதல்வர்! தமிழகத்தின் நீளமான பாலம்!

தீபாவளி வெளியீட்டில் இளம் நாயகர்கள்!

தமிழக மீனவர்கள் 30 பேரை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை!

பிகார் தேர்தலில் 4 லட்சம் பாதுகாப்புப் பணியாளர்கள்: வினய் குமார்

SCROLL FOR NEXT