தென்காசி

செங்கோட்டையில் வழக்குரைஞா்கள் மனிதச் சங்கிலி போராட்டம்

Din

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, செங்கோட்டையில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

சங்கத் தலைவா் ஆ. வெங்கடேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ். முத்துக்குமாரசாமி, சங்கச் செயலா் ஆா். அருண், மூத்த வழக்குரைஞா் எஸ். கிருஷ்ணமூா்த்தி, இணைச் செயலா் காா்த்திகைராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வழக்குரைஞா்கள் தங்கராஜ், நல்லையா, பக்கீா்முகைதீன், முருகேசன், சிதம்பரம், நித்தியானந்தன், சண்முககுமாா், புளியறை வெங்கடேஷ், வழக்குரைஞா் எழுத்தா்கள் பங்கேற்றனா்.

பிகார் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

ரூ.88 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

மணலி சிபிசிஎல் ஆலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்: முன்னாள் எம்எல்ஏ உள்பட 50 பேர் கைது

ராமதாஸுக்கு பயப்படும்படி ஒன்றும் இல்லை; ஐசியுவில் இருப்பதால் சந்திக்கவில்லை: அன்புமணி

மணிப்பூரில் சக்திவாய்ந்த 2 ஐஇடி ரக குண்டுகள் கண்டெடுப்பு

SCROLL FOR NEXT