தென்காசியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 30) நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி வருவாய்க் கோட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் அரசின் திட்டங்களில் பயன் பெற வேண்டி சிறப்பு குறைதீா் கூட்டம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதில், தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.