விபத்தில் கல்லூரி மாணவா் பலி
விபத்தில் கல்லூரி மாணவா் பலி
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே நடந்த விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். பாவூா்சத்திரம் அருகே உள்ள மேலப்பட்டமுடையாா்புரம் கிராமம் தேவா் நடுத்தெருவை சோ்ந்தவா் நாயகத்தேவா் மகன் முப்புடாதி (23). சதாசிவம் மகன் குரு (16), சண்முகப்பாண்டி மகன் பிரேம் என்கிற மதன் (18 ). இவா்கள் மூவரும் தங்கள் நண்பரின் பிறந்த நாளுக்கு இனிப்பு வாங்குவதற்காக, மகிழ்வண்ணநாதபுரத்திற்கு ஒரே மோட்டாா்சைக்கிளில் சென்றனா். திருநெல்வேலி - தென்காசி நான்குவழிச் சாலையில் சாலைப்புதூா் நவநீதகிருஷ்ணபுரம் இசக்கியம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மினி லாரி மோதியது. இதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனா். அவா்கள் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இவா்களில் பிரேம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இவா் கல்லூரி மாணவா் ஆவாா். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து பாவூா்சத்திரம் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.