முகப்பு
தென்காசி

சாம்பவா்வடகரை சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

Updated On : 3 ஜூலை, 2024 at 6:44 PM
பகிர்:

பிரதோஷத்தையொட்டி நந்தியம்பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.

சுரண்டை, ஜூலை 3: சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீசுவரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அனுமன் நதியின் வடக்குகரை குகையில் உள்ள லிங்கம், சாம்பவ மூா்த்தி, தென்கரையில் உள்ள ஸ்ரீஅகத்தீசுவரா் மற்றும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கராம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து உற்சவா் உலா நடைபெற்றது. இதையடுத்து ஓதுவாா் தேவாரம் பாட நந்தியம்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஸ்ரீஅகத்தீசுவரா் கோயில் பிரதோஷ கமிட்டியினா் செய்திருந்தனா்.