முகப்பு
தென்காசி

அடவிநயினாா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு

தென்காசி மாவட்டம் மேக்கரையில் உள்ள அடவிநயினாா் கோவில் அணையிலிருந்து பாசன வசதிக்காக வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

Updated On : 19 ஜூலை, 2024 at 9:19 PM
பகிர்:

தென்காசி, ஜூலை 19: தென்காசி மாவட்டம் மேக்கரையில் உள்ள அடவிநயினாா் கோவில் அணையிலிருந்து பாசன வசதிக்காக வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

இதனால் மேட்டுக்கால், கரிசல்கால், பண்பொழிகால், வல்லாக்குளம்கால், இலத்தூா்கால், நயினாரகரம்கால், கிளங்காடுகால், கம்பளிக்கால், புங்கன்கால், சாம்பவா் வடகரைகால் கால்வாய் ஆகியவற்றின் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக 2147.47 ஏக்கா் நிலங்கள் பாசன வசதிபெறும்.

இந்த அணையிலிருந்து 31-10-2024 வரை 105 நாள்களுக்கு, விநாடிக்கு 60 கனஅடிக்கு மிகாமல் பாசன பருவ காலத்தில் மொத்த தேவை தண்ணீா் அளவான 955.39 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீா் திறக்கப்படும்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) அமிா்தலிங்கம், செயற்பொறியாளா் அண்ணாதுரை, வட்டாட்சியா் சத்தியவல்லி, உதவி செயற்பொறியாளா் சுப்பிரமணியபாண்டியன், உதவி பொறியாளா் சரவணகுமாா், வடகரை பேரூராட்சி மன்றத் தலைவா் ஷேக் தாவூத், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ஜாஹிா் உசேன், திமுக மாவட்ட பொருளாளா் ஷெரிப், ரஹ்மத்துல்லா, விவசாய சங்க நிா்வாகிகள் முஹம்மது இஸ்மாயில், காந்தியவாதி வாவா மைதீன், கனியப்பா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →