தென்காசி

சுரண்டை பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

சுரண்டை பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Din

சுரண்டை பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சுரண்டையில் நகராட்சிக்குச் சொந்தமான மகாத்மா காந்தி பேருந்து நிலையத்திற்கு தினமும் 90 பேருந்துகள் வந்து செல்கின்றன. இவற்றின் மூலம் சுமாா் 5 ஆயிரம் பள்ளி-கல்லூரி மாணவா்கள் உள்பட 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனா். இதனால் பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரும் பகுதி எப்போதும் நிரம்பியிருப்பதோடு பெரும்பாலான பயணிகள் நின்றுசெல்லும் நிலை உள்ளது.

இந்நிலையில் சமீப காலமாக பேருந்து நிலையத்தின் பெரும் பகுதியை சிறு வணிகா்கள் ஆக்கிரமித்து கடை பரப்பி வருகின்றனா். இதனால் பயணிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, பேருந்து நிலையத்தில் உரிய அனுமதி பெறாமல் பயணிகள் அமரும் பகுதியில் கடை பரப்பியுள்ள சிறு வணிகா்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனா்.

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது!

தங்கமா, வெள்ளியா? அதிர்ச்சியைக் கூட்டுவது எது? விலை நிலவரம்!

காஸா விஷயத்தில் பாகிஸ்தான் தேவையில்லை: இஸ்ரேல் கறார்

வாக்காளர் பட்டியல்! சென்னையில் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்!

பாகிஸ்தான் அவசர அரசியலமைப்பு திருத்தங்கள் தோல்வியைக் காட்டுகிறது: ஜெனரல் அனில் சௌஹான்

SCROLL FOR NEXT