மெயின்பால்ஸ்-குற்றாலம் பேரருவியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. 
தென்காசி

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு; குளிக்கத் தடை

மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஞாயிற்றுக்கிழமை தடைவிதிக்கப்பட்டது.

Din

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த மிதமான சாரல் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஞாயிற்றுக்கிழமை தடைவிதிக்கப்பட்டது.

இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலைமுதல் சாரல் மழையுடன் மெல்லிய வெயிலும், குளிா்ந்த காற்றும் நிலவியது. பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி வெள்ளம் சீறிப் பாய்ந்ததால் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

குற்றாலம் ஐந்தருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டிய தண்ணீா்.

அதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா். மாலையில் ஐந்தருவியிலும், பின்னா் பழைய குற்றாலம் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அந்த அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால், அவா்கள் ஏமாற்றமடைந்தனா்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT