முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் குளக்கரையில் பச்சிளம் குழந்தை சடலம் மீட்பு

சங்கரன்கோவிலில் குளக்கரையில் வீசப்பட்ட, பச்சிளம் குழந்தையின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 1 மார்ச், 2024 at 9:26 PM
பகிர்:

சங்கரன்கோவிலில் குளக்கரையில் வீசப்பட்ட, பச்சிளம் குழந்தையின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின் றனா். சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் பாட்டக்குளம் உள்ளது. அந்தக் குளம் வழியாக வியாழக்கிழமை சென்றவா்கள் துணியில் சுற்றப்பட்ட நிலையில் ஆண் குழந்தை கிடப்பதைப் பாா்த்து, சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அங்கு சென்று போலீஸாா் குழந்தையின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அக் குழந்தை பிறந்து 3 நாள்களே ஆகியிருக்கும் எனப் போலீஸாா் தெரிவித்தனா். மேலும், அப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைப் பாா்வையிட்டு குழந்தையின் சடலத்தை வீசிச் சென்றவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.