முகப்பு
தென்காசி

ஆலங்குளம் பேரூராட்சியில் கட்டமைப்புத் தேவைகள்: அமைச்சரிடம் கோரிக்கை

ஆலங்குளம் பேரூராட்சியில் கட்டமைப்புத் தேவைகள்

Updated On : 3 மார்ச், 2024 at 4:20 AM
பகிர்:

ஆலங்குளம் பேரூராட்சியில் கட்டமைப்புத் தேவைகள் குறித்து நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேருவிடம் திமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக அமைச்சரிடம் ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் எம். சுதாவின் மனுவை அவா் சாா்பில் தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் அளித்தாா். மனு விவரம்: ஆலங்குளத்தில் உள்ள காமராஜா் நினைவுப் பேருந்து நிலையம் 1989இல் கட்டப்பட்டது. திருநெல்வேலி - தென்காசி சாலை விரிவாக்கத்தின்போது பேருந்து நிலையம் முன்னாலிருந்த கடைகள் இடிக்கப்பட்டன. புதிய கடைகள் கட்டவும், பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தவும் நிதி ஒதுக்க வேண்டும். சுமாா் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பேரூராட்சிக் கட்டடத்துக்குப் பதிலாக புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும். கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், 81 பேருக்கு வீடுகள் கட்ட உத்தரவு வழங்கப்பட்டும் நிதி வழங்கப்படவில்லை. அந்த நிதியை விடுவிக்க வேண்டும். ஆலங்குளத்தில் மின் மயானம் அமைக்க வேண்டும் என, மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. பேரூராட்சி உறுப்பினா் சுந்தரம், முன்னாள் உறுப்பினா் மோகன்லால் ஆகியோா் உடனிருந்தனா்.