முகப்பு
தென்காசி

தென்காசியில் ரத்த தான முகாம்

Updated On : 10 மார்ச், 2024 at 12:16 AM
பகிர்:

தமிழக முதல்வா் முக.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக மாவட்ட மருத்துவ அணி சாா்பில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. தென்காசி கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற முகாமிற்கு, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் ஆறுமுகசாமி, மாவட்ட துணைச் செயலா் கனிமொழி, ஒன்றிய செயலா் அழகுசுந்தரம், சிறுபான்மை அணி அமைப்பாளா் இஞ்சி இஸ்மாயில், மகளிரணி அமைப்பாளா் சங்கீதா, குற்றாலம் பேரூா் செயலா் சங்கா், வழக்குரைஞரணி வேல்சாமி, செங்கோட்டை நகர செயலா் ஆ.வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். டாக்டா் அன்பரசன் சிறப்புரை ஆற்றினாா். டாக்டா் மாரிமுத்து, ராமராஜ், அயலக அணி மாவட்ட தலைவா் நசீா், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை கருப்பணன், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் சங்கீதா, மாவட்ட மகளிா் தொண்டரணி வலைதள பொறுப்பாளா் சோபனாராணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.