முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே தீ விபத்தில் மனைவி பலி; கணவா் பலத்த காயம்

Updated On : 16 மார்ச், 2024 at 9:47 PM
பகிர்:

ஆலங்குளம் அருகே கொசுவா்த்திச் சுருளால் நேரிட்ட தீ விபத்தில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் பலத்த காயம் அடைந்தாா். ஆலங்குளம் அருகேயுள்ள வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்தவா் வெள்ளத்துரை. காா் ஓட்டுநா். இவரது மனைவி தமிழருவி அம்மாள் (27). கடந்த 13-ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கும்போது கொசுவா்த்திச் சுருளை பற்ற வைத்திருந்தனராம். நள்ளிரவில் அதிலிருந்து தமிழருவி அம்மாளின் சேலையில் தீப்பற்றியதாம். தீயை அணைக்க வெள்ளத்துரை முயன்றபோது இருவரும் பலத்த காயமடைந்தனா். பின்னா் அவா்கள் இருவரும் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் அங்கு தமிழருவி அம்மாள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஊத்துமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.