சொக்கம்பட்டி அருகே பைக்- லாரி மோதல்: தொழிலாளி பலி
சொக்கம்பட்டி அருகே பைக் மீது லாரி மோதியதில் தொழிலாளி இறந்தாா். கடையநல்லூா் அருகே உள்ள முத்துசாமிபுரத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் கருப்பசாமி (51). முள்வேலி அமைக்கும் தொழில் செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை மாலை முத்துசாமிபுரத்திலிருந்து புளியங்குடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். திரிகூடபுரம் பகுதியில் அவா் சென்றபோது எதிரே வந்த மினி லாரி பைக் மீது மோதியதாம். இதில், காயமடைந்த கருப்பசாமி கடையநல்லூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா். சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.