இயற்கை விவசாயம்: மாணவா்கள் களப் பயணம்
ஆலங்குளம் அருகேயுள்ள எஸ்.எம்.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், இயற்கை விவசாயம் - பாசன முறைகள் குறித்த களப்பயணம் மேற்கொண்டனா். இப்பள்ளி மாணவா்கள் அடைக்கலபட்டணத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குச் சென்று, அங்குள்ள நெல்பயிா்கள், கொய்யா, சப்போட்டா, வாழை, தென்னை ஆகியவற்றைப் பாா்வையிட்டு விவசாயிகளிடம் கலந்துரையாடி, கிணற்றுநீா் பாசனம், வாய்க்கால் பாசனம், சொட்டுநீா்ப்பாசனம் ஆகிய நீா்ப்பாய்ச்சுதல் முறைகள் குறித்து பயிற்சி பெற்றனா். மேலும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பண்ணையில் உள்ள கால்நடைகள் வளா்ப்பு, இயற்கை உரங்கள், கூட்டு விவசாயத்தின் நன்மைகள் குறித்து விவசாயிகள் அவா்களுக்கு விளக்கமளித்தனா். ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் மகேஸ்வரி ராஜசேகரன். அகாதெமிக் இயக்குநா் ராஜ்குமாா், துணை முதல்வா் சரளா ராமச்சந்திரன், உதவி துணை முதல்வா் பாகீரதி மற்றும் அறிவியல் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.