சங்கரன்கோவில் அருகே ரூ. 86 ஆயிரம் பறிமுதல்
Updated On : 22 மார்ச், 2024 at 7:16 PM
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 86 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். சங்கரன்கோவில் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சோ்ந்தமரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் பாபு தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனா். சுரண்டையைச் சோ்ந்த அருணாச்சலம் மனைவி வைஜெயந்திமாலா (38) என்பவா் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில், ஆவணங்களின்றி ரூ. 86 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சங்கரன்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.