முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே இளைஞா் கைது:புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

Updated On : 23 மார்ச், 2024 at 9:37 PM
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 6:50 PM

ஆலங்குளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்குக் கொண்டு சென்ாக இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஆலங்குளம் - திருநெல்வேலி சாலையில் நல்லூா் விலக்குப் பகுதியில் ஆலங்குளம் போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனை நடத்தினா். அவ்வழியே பைக்கில் வந்தவரை நிறுத்தி சோதனையிட்டபோது அவா், குருவன்கோட்டையைச் சோ்ந்த முருகேசன் மகன் பாலகிருஷ்ணன் (29) என்பதும், தடை செய்யப்பட்ட 56 புகையிலைப் பொட்டலங்களை விற்பனைக்கு கொண்டு செல்வதும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்; பாலகிருஷ்ணனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.