ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்கு 382 வாக்குப்பதிவு இயந்திரங்கள்
Updated On : 23 மார்ச், 2024 at 9:30 PM
திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்கு 382 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சனிக்கிழமை கொண்டுவரப்பட்டன. இத்தொகுதியில் 319 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 23 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில், வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 384 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 414 சரிபாா்க்கும் இயந்திரங்கள் ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டன. அவை, தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணவேல், துணை தோ்தல் நடத்தும் அலுவலா் கிறிஸ்டி, அனைத்துக் கட்சிகளின் பிரமுகா்கள் முன்னிலையில் வாகனங்களிலிருந்து இறக்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.