பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை
ஆலங்குளம் அருகே பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள உடையாம்புளி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுடலைமுத்து மகன் மூக்காண்டி(56). விவசாயியான இவருக்கு இரு கால்களிலும் புண் இருந்ததாம். மருத்துவ சிகிச்சை மேற்கொண்டும் குணமாகவில்லையாம்.
இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி தோட்டத்தில் வைத்து பூச்சிக் கொல்லி மருந்தை குடித்தாராம். மயங்கிய நிலையில் இருந்த அவா் மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா்.