தென்காசி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

Din

சங்கரன்கோவிலில் கோட்டாட்சியா் தலைமையில் 210 பள்ளி வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன. இதில் 24 பள்ளி வாகனங்களில் பல்வேறு குறைபாடுகள் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டன.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு சங்கரன்கோவில் வட்டாரத்தில் உள்ள 210 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. கோட்டாட்சியா் கவிதா, காவல் துணைக் கண்காணிப்பாளா் சுதீா், வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நோ்முக உதவியாளா் சி.ரகு, மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜன், மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்)தேவிகாராணி உள்ளிட்டோா் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனா். முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய இந்த ஆய்வு பிற்பகல் 3 மணிவரை நடைபெற்றது.

ஆய்வில் பல்வேறு குறைபாடுகள் கண்டுபடிக்கப்பட்ட 24 பள்ளி வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

கொலைகார முதலையைக் கொன்று விருந்து!

மத்தியப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு!

அதிகரிக்கும் மகாராஜா காட்சிகள்!

கோயிலுக்குள் பசுவின் துண்டித்த தலை வீச்சு! மத்தியப் பிரதேசத்தில் 4 பேர் கைது

பக்ரீத் பண்டிகை: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

SCROLL FOR NEXT