முகப்பு
தென்காசி

பி.இ. சோ்க்கைக்கு விண்ணப்பிக்க கடையநல்லூா் அரசு கல்லூரியில் சேவை மையம்

Updated On : 9 மே, 2024 at 11:32 PM
பகிர்:

பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்க கடையநல்லூா் அரசு கல்லூரியில் செயல்படும் சேவை மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கடையநல்லூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் பா.விக்டோரியா தங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு

இணையவழியில் விண்ணப்பிக்கும் பணி மே 6 முதல் தொடங்கியுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவா்கள்

கடையநல்லூா் அரசு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை

மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கெனவே விண்ணப்பித்தவா்கள் தகவல்களில் திருத்தம் செய்ய வேண்டுமென்றாலும் இந்த சேவை மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் இதுதொடா்பான விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளா் முருகன்(9629572959), இணை ஒருங்கிணைப்பாளா் சரவணன்(9994446797) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.