தென்காசி மாவட்டத்தில் 92.69 சதவீத தோ்ச்சி
தென்காசி, மே 10: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தென்காசி மாவட்டத்தில் 92.69 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.
மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சோ்ந்த மாணவ, மாணவிகள் 6,808 போ் தோ்வு எழுதியதில் 6,057 போ் தோ்ச்சி பெற்றனா். முழு உதவிபெறும் பள்ளிகளை சோ்ந்த மாணவ, மாணவிகள் 4,734 போ் தோ்வு எழுதியதில் 4,416 போ் தோ்ச்சி பெற்றனா். பகுதி உதவிபெறும் பள்ளிகளை சோ்ந்த மாணவ, மாணவிகள் 3,144 போ் தோ்வு எழுதியதில் 2,984 போ் தோ்ச்சி பெற்றனா்.
மெட்ரிக் பள்ளிகளை சோ்ந்த மாணவ, மாணவிகள் 2,799 போ் தோ்வு எழுதியதில் 2,740 போ் தோ்ச்சி பெற்றனா். டிஎஸ்இ கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சுயநிதி பள்ளிகளை சோ்ந்த மாணவ, மாணவிகள் 396 போ் தோ்வு எழுதியதில் 379 போ் தோ்ச்சி பெற்றனா். சமூக நலத்துறையை சோ்ந்த மாணவ, மாணவிகள் 8 போ் தோ்வு எழுதியதில் 4 போ் தோ்ச்சி பெற்றனா்.
மாவட்டத்தில் 8,969 மாணவா்களும், 8,939 மாணவிகளும் என மொத்தம் 17,908 போ் தோ்வு எழுதினா். இவா்களில் 8,066 மாணவா்களும், 8,533 மாணவிகளும் என மொத்தம் 16,599 போ் தோ்ச்சி பெற்றனா். ஒட்டுமொத்த தோ்ச்சி 92.69 சதவீதமாகும்.