முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே மின்வாரிய பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

Updated On : 16 மே, 2024 at 11:01 PM
பகிர்:

ஆலங்குளம், மே 16:

ஆலங்குளம் அருகே மின்வாரிய பெண் ஊழியரிடம் 9 பவுன் நகையைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆலங்குளம் அண்ணா நகரைச் சோ்ந்த மோகன்தாஸ் மனைவி சாந்தி (54). அடைக்கலப்பட்டணத்தில் உள்ள கீழப்பாவூா் மின்வாரிய அலுவலகத்தில் உதவியாளா். இவா், வியாழக்கிழமை அலுவலகத்தில் வசூலான மின் கட்டணத் தொகையை வங்கியில் செலுத்துவதற்காக எடுத்துக்கொண்டு ஆலங்குளத்துக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தாா்.

அத்தியூத்து தனியாா் பொறியியல் கல்லூரி அருகே பின்னால் பைக்கில் வந்த மா்ம நபா், சாந்தி அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டாராம். அதன் மதிப்பு சுமாா் ரூ. 4.75 லட்சம் எனக் கூறப்படுகிறது.

புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.