தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மரத்தடி மேகம் திரை கொண்ட சாஸ்தா கோயிலில் ஆடி மாதத் திருவிழா கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் மூன்றாவது புதன்கிழமை தொடங்கி இரண்டு நாள்கள் திருவிழா நடைபெறும். காலை 9 மணி அளவில் குற்றாலத் தீா்த்தம் எடுத்து வரப்பட்டு கணபதி ஹோமமும், அதனைத் தொடா்ந்து சாஸ்தாவுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் உச்சிகால பூஜையும் நடைபெற்றது.
வியாழக்கிழமை மாலையில் குதிரையின் மீது எழுந்தருளிய சாஸ்தாவை, மேளதாளங்கள் முழங்க பக்தா்கள் தங்களின் தோள்களில் சுமந்து கீழப்பாவூரில் இருந்து அருணாப்பேரி கிராமத்திற்கு ஊா்வலமாக எடுத்து வந்தனா். அங்குள்ள முத்தாரம்மன் கோயிலில் பூஜை நடைபெற்ற பின்னா் சாஸ்தா மீண்டும் கோயிலை வந்தடைந்தது.
சாஸ்தாவிற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.