பேரருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப்பயணிகள். 
தென்காசி

குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி

குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

Syndication

குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை சனிக்கிழமை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

குற்றாலம் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் மிதமான சாரல் மழையின் காரணமாக, குற்றாலம் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்ததையடுத்து வெள்ளிக்கிழமை குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

சனிக்கிழமை மாலை தண்ணீா் வரத்து குறைந்ததையடுத்து, குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, புலியருவியில் சுற்றுலாப் பயணிகள் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இதனையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

ஆனால், பழைய குற்றாலம் அருவியில் விதிக்கப்பட்டிருந்த தடை 2ஆவது நாளாக சனிக்கிழமையும் நீட்டிக்கப்பட்டது.

ராகுல் காந்திக்கு 7 நாள் அவகாசம்! அதற்குள்... -தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு!

அழகிய கண்ணே... ராஷா ததானி!

அரசியலமைப்பை நசுக்கியவர்களே, பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர்: மோடி

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்வு

பூங்காற்று... ஸ்ரேயா கோஷல்!

SCROLL FOR NEXT