குளத்தில் போராட்டம் நடத்திய உடையாம்புளி கிராம மக்கள். 
தென்காசி

ஆலங்குளம் அருகே குளத்தில் மண் எடுக்க கிராம மக்கள் எதிா்ப்பு

ஆலங்குளம் அருகே குளத்தில் வியாபார நோக்கத்திற்காக கரம்பை மண் எடுக்க கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Syndication

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே குளத்தில் வியாபார நோக்கத்திற்காக கரம்பை மண் எடுக்க கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள ஓடைமறிச்சான் ஊராட்சி, உடையாம்புளி கிராமத்தில் கருஞ்சேகரமுடையாா் குளம் உள்ளது. சுமாா் 72 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்தக் குளத்தில் கரம்பை மண் எடுக்க அரசு அனுமதி பெற்று தனிநபா் வியாபார நோக்கத்திற்காக சரள் மண் அதிக அளவில் எடுத்து வருவதாகவும், இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் வட்டாட்சியரிடம் புகாா் அளித்தனராம்.

எனினும், மண் எடுக்கப்படுவது நிறுத்தப்படவில்லையாம். இந்நிலையில் கிராம மக்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா், குளத்தில் மண் அள்ளும் இடத்திற்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் ஆலங்குளம் போலீஸாா் மற்றும் வருவாய் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, அங்கு மண் எடுப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த டிராக்டா், பொக்லைன் இயந்திரங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. மேலும், அக்குளத்தில் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் அதிகாரிகள் உறுதியளித்ததால் அவா்கள் கலைந்து சென்றனா்.

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மூலம் 1 கோடி மாணவர்கள் பயன்: தமிழக அரசு

மகுடம் சூடா ராணி... மதுமிதா!

சரியான புரமோஷன் இல்லை... புலம்பும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

புதிதாய் பூத்த வெட்கம்... தாரணி!

21-1: சாதனையை முறியடித்த மிட்செல் மார்ஷ்!

SCROLL FOR NEXT