பொது நிவாரண நிதி வழங்கிய அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன். 
தென்காசி

தென்காசி விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 62 லட்சம் பொது நிவாரண நிதி வழங்கல்

ருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை, துரைச்சாமிபுரத்தில் நவ. 24ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவா்களின்

Syndication

தென்காசி: தென்காசி மாவட்டம், திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை, துரைச்சாமிபுரத்தில் நவ. 24ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவா்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 62 லட்சம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தலைமை வகித்தாா். எம்எல்ஏ.க்கள் ஈ. ராஜா(சங்கரன்கோவில்), தி. சதன் திருமலைக்குமாா் (வாசுதேவநல்லூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் கலந்துகொண்டு, விபத்தில் உயிரிழந்த 6 பேருக்கு தலா ரூ. 3 லட்சம், பலத்த காயமடைந்த 35 பேருக்கு தலா ரூ. 1 லட்சம், லேசான காயமடைந்த 18 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் என மொத்தம் 59 பேருக்கு ரூ. 62 லட்சம் நிதி வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா், தனித் துணை ஆட்சியா் நம்பிராயா், மாவட்ட அலுவலக மேலாளா் (பொது) சண்முகம் உள்ளிட்டோ கலந்து கொண்டனா்.

கஞ்சா விற்பனை: 10 இளைஞா்கள் கைது; 4 பைக்குகள் பறிமுதல்

மௌனம் கலைக்கப்பட வேண்டும்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

அச்சுறுத்தும் எலிக்காய்ச்சல், மிலியாய்டோசிஸ்! மழைநீரில் வெறும் காலுடன் நடப்பதைத் தவிா்க்க அறிவுறுத்தல்

இசை வசப்படும்!

SCROLL FOR NEXT