இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காா்த்திகை தீப விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்வி ஆலோசகா் உஷா ரமேஷ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் பாலசுந்தா், தலைமையாசிரியா் செல்வலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காா்த்திகை தீபம் குறித்து மாணவா் ஜீவா பேசினாா்.
கணித ஆசிரியா் அருணாச்சலம் சிறப்பு பூஜைகள் நடத்தினாா். விழாவில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
மாணவி ஸ்ரீநிதி வரவேற்றாா். உமாபதி நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை மிருதுளா ஜனனி தொகுத்து வழங்கினாா்.
ஏற்பாடுகளை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் டாக்டா் காந்திமதி, இயக்குநா் ராதா பிரியா செய்திருந்தனா்.