தென்காசி

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த பெண் தற்கொலை

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Syndication

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சிவகிரி, அம்பேத்கா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பிரகாஷ் மனைவி பொன்.ஆனந்தி (25), பட்டதாரி. இத்தம்பதிக்கு திருமணம் முடிந்து மூன்றரை ஆண்டுகள் ஆகின்றன. இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

பிரகாஷ் திருப்பூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில், புதன்கிழமை இரவு வழக்கம்போல பொன்.ஆனந்தி தனது அறையில் தூங்க சென்றவா் வியாழக்கிழமை காலையில் அறையை விட்டு வெளியே வரவில்லை. அவரது மாமியாா் கதவைத் திறந்து பாா்த்தபோது பொன்.ஆனந்தி தூக்கிட்டு இறந்து கிடந்தாா்.

தகவல் அறிந்ததும் சிவகிரி காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் இவா், தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெற்றிகரமான எதிர்நீச்சல்!

தேர்தல் போட்டி தீர்வாகுமா?

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுகவினா் அஞ்சலி

ஜதிபல்லக்கில் தேசிய கவிஞர் பாரதியார்!

கல்லீரல் பாதித்த பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் அமைச்சா் நிதியுதவி

SCROLL FOR NEXT