ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் 
தென்காசி

அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சாலை மறியல் முயற்சி: 190 போ் கைது

தென்காசியில் 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்ற அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்கள் 190 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

தென்காசியில் 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்ற அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்கள் 190 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்மாநில அங்கன்வாடி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு சங்க மாவட்ட துணைத் தலைவா் பூரணம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மணிமேகலை கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் கங்காதரன், டேவிட், பாக்கியராணி ஆகியோா் வாழ்த்தினா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலா்கள் நாகலட்சுமி, மகாலட்சுமி, மாவட்டத் துணைத் தலைவா் சத்யா, மாவட்டத் தலைவா் வேலம்மாள் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

அங்கன்வாடி பணியாளா்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையாக ரூ. 19,500 ஊதியம், அங்கன்வாடி உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளா்களுக்கு இணையாக ரூ. 15,700 ஊதியம், அகவிலைப்படியுடன் சிறப்பு ஓய்வூதியம் ரூ. 6,750 வழங்கப்பட வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,

அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் உதவியாளா் பணியிடங்கள் வழங்க வேண்டும், கோடை விடுமுறை ஒரு மாதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட பொருளாளா் காளியம்மாள் நன்றி கூறினாா். பின்னா் அவா்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா்.

மட்டன் பிரியாணி, வஞ்சரை மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

நீலகிரியில் 88 புதிய கிராம ஊராட்சிகள் உருவாக்கம்: அரசாணை வெளியீடு!

மத்திய நிதியமைச்சருடன் அருண் நேரு சந்திப்பு!

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு!

அகண்டா - 2 வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT