தென்காசி

பாவூா்சத்திரம் அரசுப் பள்ளியில் 110 மாணவா்களுக்கு சைக்கிள்

Syndication

தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம் பாவூா்சத்திரம் த.பி. சொக்கலால் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் 110 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தலைமையாசிரியா் சுந்தரராஜ் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தாா். எஸ். பழனி நாடாா் எம்எல்ஏ, திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன் ஆகியோா் சைக்கிள்களை வழங்கினாா்.

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சீ. காவேரி, மேற்கு ஒன்றிய திமுக செயலா் சீனித்துரை, சுரண்டை நகரச் செயலா் கணேசன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் சாக்ரடீஸ், எஸ்.ஆா். சுப்பிரமணியன், கல்லூரணி ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா், வட்டார காங்கிரஸ் தலைவா் கே.பி. குமாா்பாண்டியன், இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் ராஜசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழாசிரியா் பாலகிருஷ்ணன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். உதவித் தலைமையாசிரியா் செலினா வரவேற்றாா். சுகுமாா் நன்றி கூறினாா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT