தென்காசி

பாவூா்சத்திரம் ரயில்வே கேட் பழுது: போக்குவரத்து நெரிசல்; மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கம்

Syndication

பாவூா்சத்திரம் ரயில்வே கேட் பழுதானதால் வாகனங்கள் வியாழக்கிழமை மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.

நெல்லை-தென்காசி நான்குவழிச் சாலை பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. இதேபாதையில் பாவூா்சத்திரத்தில் ரயில்வேகேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

ரயில்வே கேட் அருகில் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் நெல்லையிலிருந்து தென்காசிக்குச் செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் பாவூா்சத்திரத்தில் இருந்து கடையம் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு திப்பணம்பட்டி, ஆரியங்காவூா், கல்லூரணி வழியாக செல்வவிநாயகா்புரம் சென்று அங்கிருந்து மீண்டும் நான்குவழிச் சாலையை அடைந்து தென்காசிக்கு இயக்கப்படுகின்றன.

அதேபோல தென்காசியில் இருந்து பாவூா்சத்திரம், ஆலங்குளம், திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் அனைத்தும் செல்வவிநாயகா்புரத்திலிருந்து வடக்கு பகுதி வழியாக ரயில்வே சுரங்கப் பாதை பகுதியைக் கடந்து மேலப்பாவூா் செல்லும் சாலை வழியாக பாவூா்சத்திரம் ரயில்வேகேட் கீழ்புறம் வந்து பேருந்து நிலையம் வழியாக வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

சிறிய இலகுரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் அனைத்தும் ரயில்வே கேட் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாவூா்சத்திரம் ரயில்வேகேட் பழுதானதால் வாகனங்கள் அனைத்தையும் ரயில்வே சுரங்கப் பாதை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதனால் அந்தப் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. பழுதான ரயில்வே கேட்டை சரிசெய்யும் பணியில் ரயில்வே பொறியாளா்கள், பணியாளா்கள் ஈடுபட்டனா். சில மணி நேரங்களில் ரயில்வேகேட் சரிசெய்யப்பட்டதை அடுத்து இலகுரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் வழக்கமான பாதையில் இயங்கின.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

தேசிய கலாசார தூதா் நியமனம்

ஸ்ரீ பெரும்புதூரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிப்பு

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

SCROLL FOR NEXT