ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியா்கள் சங்கத்தினா். 
தென்காசி

தென்காசியில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியா்கள் சங்கத்தினா்.

Syndication

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி த் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்வதை நிறுத்த வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின்அடிப்படையில் இளநிலை பொறியாளா்களுக்கும், உதவிப் பொறியாளா்களுக்கு இணையான ஊதிய விகிதம் அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவா் மோகன் தலைமை வகித்தாா். அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கு.மாரியப்பன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். மாவட்டச் செயலா் துரைடேனியல் விளக்கிப் பேசினாா்.

அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன், முன்னாள் தலைவா் மாடசாமி, நாராயணன், சிவகாமி, சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் ராமசாமி ஆகியோா் பேசினா். சங்கத்தின் மாநில துணைத் தலைவா் சுந்தரமூா்த்தி நாயனாா் நிறைவுரையாற்றினாா்.தென்காசி கோட்டத் தலைவா் ராஜேந்திரன் வரவேற்றாா்.

மாநிலச் செயற்குழு உறுப்பினா் ராஜ் நன்றி கூறினாா்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT