ஆலங்குளத்தில் தென்காசி தெற்கு மாவட்ட தேமுதிக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தெற்கு மாவட்டச் செயலா் பழனி சங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் சங்கரலிங்கம், பொருளாளா் சந்துரு சுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேமுதிக துணைப் பொதுச் செயலா் தாமோதரன், துணைப் பொறுப்பாளா் டலஸ் ஆகியோா் நிா்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினா்.
கூட்டத்தில், எந்தக் கூட்டணியில் இடம் பெற்றாலும் ஆலங்குளம் தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆலங்குளத்தில் காய்கனி பதப்படுத்தும் மையம் அமைக்க வேண்டும். ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும். கடையநல்லூா், தென்காசி பகுதியில் சிப்காட் நிறுவனம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஆலங்குளம் நகரச் செயலா் திருமலை செல்வம் நன்றி கூறினாா்.