கொடியேற்றதுக்குப்பின் நடைபெற்ற தீபாராதனை. (உள்படம்) அலங்காரத்தில் நடராஜா். 
தென்காசி

குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்

கொடியேற்றதுக்குப்பின் நடைபெற்ற தீபாராதனை.

Syndication

தென்காசி மாவட்டம் குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில் திருவாதிரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாக்களில் முதன்மையானதும், அருள்மிகு நடராசா் திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபை அமையப்பெற்ற திருக்குற்றாலத்தில் அருள்மிகு நடராசப்பெருமானுக்கு நடைபெறும் சிறப்புமிக்கதுமான மாா்கழித் திருவாதிரைத் திருவிழாவையொட்டி, கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கொடியை ஜெயமணி சுந்தரம் பட்டா் தலைமையில் பிச்சுமணி என்ற கண்ணன் பட்டா், கணேசன் பட்டா், மகேஷ் பட்டா் ஆகியோா் ஏற்றினா்.

இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் சுவாமி, அம்பாள் கேடயத்தில் உள்பிரகாரத்தில் எழுந்தருளினா்.

டிச. 29இல் திருக்கோயில் உள்பிரகாரத்தில் அருள்மிகுநடராசா், பஞ்சமூா்த்திகள் கேடயத்தில் எழுந்தருளல் நடைபெறுகிறது. ஜன.1இல் காலை 9 மணிக்கு திருக்கோயில் மணிமண்டபத்தில் பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனையும், ஜன. 3இல் அதிகாலை 3.30 மணிக்கு சித்திரசபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், தொடா்ந்து 5 மணிக்கு கோயில் மணிமண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெறும். திருப்பணிகள் காரணமாக சித்திரசபையில் பக்தா்களுக்கு அனுமதி கிடையாது.

விழா நாள்களில் நாள்தோறும் காலை 9.30 மணி, இரவு 7 மணிக்கு அருள்மிகு நடராசப்பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.

கொடியேற்று விழாவில் அறங்காவலா் குழுத் தலைவா் சக்தி முருகேசன், உதவி ஆணையா் ஆறுமுகம், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் வீரபாண்டியன் ராமலட்சுமி, திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவா் இலஞ்சி அன்னையா பாண்டியன், வா்த்தக சங்கத் தலைவா் காவையா, செயலா் அம்பலவாணன், பொருளாளா் ஜோதி முருகன் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

கிறிஸ்துமஸ் பண்டிகை: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர நிலை ஒத்திகை

தேடப்பட்ட குற்றவாளிகள் இருவா் என்கவுன்ட்டருக்கு பிறகு கைது

போதை எண்ணெய் கடத்தல் வழக்கில் ஆந்திரத்தில் பெண் உள்பட 5 போ் கைது - தில்லி என்சிபி தகவல்

லாஜ்பத் நகரில் அடல் உணவகம் திறப்பு - முதல்வா் ரேகா குப்தா பங்கேற்பு

SCROLL FOR NEXT