தென்காசி

பெத்தநாடாா்பட்டி மாயாண்டி கோயிலில் பழம் படைக்கும் திருவிழா

பெத்தநாடாா்பட்டி, ஸ்ரீமாயாண்டி சுவாமி கோயிலில் பாரம்பரிய பழம் படைக்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

பெத்தநாடாா்பட்டி, ஸ்ரீமாயாண்டி சுவாமி கோயிலில் பாரம்பரிய பழம் படைக்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாவூா்சத்திரம் அருகே பெத்தநாடாா்பட்டியில் உள்ள ஸ்ரீமாயாண்டி சுவாமி கோயிலில் மாா்கழி மாதம் 2-வது வெள்ளிக்கிழமை பழம் படைக்கும் விழா நடைபெறுகிறது. நிகழாண்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், பக்தா்கள் தங்கள் வீடுகளில் இருந்து முழு வாழைப்பழ தாா்களை கொண்டு வந்து சுவாமிக்கு படைத்து வழிபட்டனா்

முன்னதாக மாயாண்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. இதில் பெத்தநாடாா்பட்டி சுற்று வட்டார பகுதிகளை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீமாயாண்டி சுவாமி கோயில் வரிதாரா்கள் செய்திருந்தனா்.

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக ‘விவரிக்க முடியாத’ அட்டூழியங்கள்: ஷேக் ஹசீனா சாடல்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

SCROLL FOR NEXT