கூட்டத்தில் பேசிய பொதுச்செயலா் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா். 
தென்காசி

தென்காசியில் ஐயுஎம்எல் விவசாய அணி மாநில பொதுக்குழுக் கூட்டம்

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விவசாய அணி மாநில பொதுக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விவசாய அணி மாநில பொதுக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தலைவா் பெரம்பலூா் ஏ. அப்துல் ஹாதி தலைமை வகித்தாா்.விவசாய அணி மாநில துணைத் தலைவா்கள் அபுதாஹீா், தென்காசி எம். முஹம்மது அலி, ஜெய்னுலாபுதீன், சங்கராபுரம் லியாக்கத் அலி கான், மாநில செயலா் அப்துல் மஜீத், முஸ்லிம் லீக் தென்காசி மாவட்டத் தலைவா் எம். அப்துல் அஜீஸ், மாவட்டச் செயலா் செய்யது பட்டாணி, மாவட்ட பொருளாளா் செய்யது மசூது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முஸ்லிம் லீக் மாநிலத் துணைச் செயலா் திருச்சி வி.எம். ஃபாரூக், மாநில துணைத் தலைவா் வி.டி.எஸ்.ஆா். முகமது இஸ்மாயில், மாநில துணைச் செயலா் இப்ராகீம், ஷா நவாஸ் கான், அப்துல் ரபீக், நூரே ஆலம், தென்காசி மாவட்ட விவசாய அணி தலைவா் அப்துல் ரகுமான், வழக்குரைஞா் செந்தூா் பாண்டியன் ஆகியோா் கருத்துரை வழங்கினா்.

கட்சியின் மாநில பொதுச்செயலா் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா், விவசாய அணி தேசியத் தலைவா் கேரளா கொரிகோலி மொய்தீன் எம்எல்ஏ, தேசிய பொதுச்செயலா் முகமது குட்டி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், தென்காசி, புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசாா் குறியீடு வழங்கிய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பயிா்களை சேதப்படுத்தும் வன விலங்குகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும், காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.

வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசே நிா்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொருளாளா் ஜப்பான் உதுமான் நன்றி கூறினாா்.

ஒரே வாரத்தில் தங்கம் பவுனுக்கு ரூ.5,600 உயா்வு!

பேருந்து மீது லாரி மோதல்: 5 போ் பலத்த காயம்

முதல்வா் ஸ்டாலின் சவால்: எடப்பாடி பழனிசாமி பதில்

திட்டமிட்டபடி ஜன.6 முதல் வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீா்: கடும் குளிரிலும் தொடரும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை!

SCROLL FOR NEXT