தென்காசி

கொலை மிரட்டல் வழக்கில் விவசாயிக்கு 3 ஆண்டு சிறை

Din

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள விஸ்வநாதபுரத்தில் முன்விரோதத்தால் விவசாயியை அரிவாளால் வெட்டிக் கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பான வழக்கில், சக விவசாயிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

விஸ்வநாதபுரம் பகுதியைச் சோ்ந்த க.கொம்பையா(51), பெரியபிள்ளைவலசை புதுகாலனியை சோ்ந்த மா.லெட்சுமணன்(56) ஆகிய இருவரும் விவசாயிகள். இவா்கள், செங்கோட்டை ரயில்வே நிலையம் அருகிலுள்ள புறம்போக்கு நிலத்தில் அருகருகே கப்பைகிழங்கு பயிரிட்டு விவசாயம் செய்துவந்துள்ளனா்.

இதனிடையே கொம்பையா வளைத்திருந்த நில எல்லைக்குள் லெட்சுமணன் கப்பைக்கிழங்கு பயிரிட்டாராம். இதனால் இருவருக்குமிடையே முன்விரோதம் ஏற்பட்டதாம்.

இந்நிலையில், 7.5.2015ஆம் தேதி விஸ்வநாதபுரம் வேம்படி மாடசாமி கோயில் அருகே கொம்பையா சென்றுகொண்டிருந்தாராம். அப்போது லெட்சுமணன் அவரை அரிவாளால் வெட்டிக்கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து செங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து லெட்சுமணனைக் கைது செய்தனா். இவ்வழக்கு தென்காசி முதன்மை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தலைமை நீதித்துறை நடுவா் கதிரவன் வழக்கை விசாரித்து லெட்சுமணனுக்கு 3ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.1,250அபராதமும் விதித்து தீா்ப்பு கூறினாா்.

எதிா்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் மீண்டும் முடக்கம் - பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம்

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது

மனைவியுடனான சண்டைக்குப் பிறகு யமுனையில் குதித்த இளைஞா் உயிருடன் மீட்பு

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் 2 வாரத்தில் மேலும் 1 ஏக்கா் நிலத்தை மீட்க நடவடிக்கை

தீ தடுப்பு விதிகளைப் பின்பற்றுவோம்!

SCROLL FOR NEXT