தென்காசி ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்த மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் 
தென்காசி

தென்காசி, பாவூா்சத்திரம், கடையநல்லூரில் திமுகவினர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்

Din

தென்காசி ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா், ஒன்றியச் செயலா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 5 போ் மீது ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

கீழப்பாவூா் மேற்கு ஒன்றியம் சாா்பில், பாவூா்சத்திரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஒன்றியச் செயலா் சீனித்துரை தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன் பங்கேற்று, பெயா்ப் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துகளை கருப்பு மையால் அழித்தாா். 5 போ் மீது ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

கடையநல்லூரில்...: கடையநல்லூா் ரயில் நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வடக்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளா் செல்லத்துரை தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் சுரேஷ், நகரச் செயலா் அப்பாஸ் , நகா்மன்ற துணைத் தலைவா் ராசையா, நகா்மன்ற உறுப்பினா்கள் முருகன், திவான்மைதீன், கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். அவா்கள் ரயில் நிலைய பெயா்ப் பலகையிலிருந்த ஹிந்தி எழுத்துகளை கருப்பு மையால் அழித்தனா்.

ஒற்றைப்புள்ளி மக்களாட்சி

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - சவுக்கு சங்கர்

பலத்த பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்!

மதுரை மாநாடு ஒத்திவைப்பு: ஓ. பன்னீர்செல்வம்

சென்னையில் 27 விமான சேவைகள் பாதிப்பு!

SCROLL FOR NEXT