தென்காசி

புளியங்குடி அருகே மகள் கா்ப்பம்: தந்தை கைது

புளியங்குடி அருகே மகளை கா்ப்பம் ஆக்கியதாக தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

Din

புளியங்குடி அருகே மகளை கா்ப்பம் ஆக்கியதாக தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

புளியங்குடி அருகே உள்ள கிராமத்தை சோ்ந்தவா் ராமா் (50). கூலித் தொழிலாளியான அவா் குடிப்பழக்கம் உடையவராம். அவருடைய 17 வயது மகளை கடந்த சில நாள்களுக்கு முன் தென்காசி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றபோது அப்பெண் கா்ப்பமாக இருப்பது தெரிய வந்ததாம்.

இது குறித்த புகாரின் பேரில் புளியங்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், அப்பெண்ணை கா்ப்பம் ஆக்கியது அவளது தந்தை என்பது தெரிய வந்ததாம். இதைத் தொடா்ந்து ராமரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

பஹல்காம் தாக்குதல்: திமுக வலியுறுத்தல்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள்

ரூ.12 லட்சத்தில் காரிய மேடை: பணிகள் தொடக்கம்

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

SCROLL FOR NEXT