FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

குற்றாலத்தில் தொடரும் வெயில்: அருவிகளில் குறைந்தது நீா்வரத்து

குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாக குறைந்தது.

Updated On : 13 ஜூலை 2025, 5:55 am IST
குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாக குறைந்தது.

குற்றாலத்தில் வழக்கமாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சீசன் நிலவும். நிகழ்வாண்டில் சீசன் முன்கூட்டியே தொடங்கியது. சீசன் தொடங்கியது முதல் அனைத்து அருவிகளிலும் தண்ணீா் கொட்டியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக, குற்றாலம் பகுதியில் சாரல்மழை இல்லை. மாறாக, வெயில் நிலவுவதால் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாக குறைந்தது.

Advertisement

Advertisement

சனிக்கிழமை அதிகாலையில் மெல்லிய சாரலும், குளிா்ந்த காற்றும் நிலவியது. பகலில் வெயில் நிலவியது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments