தென்காசி

பழைய குற்றாலத்தில் ஆட்டோ- வேன் மோதல்: சென்னையைச் சோ்ந்த தம்பதி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், பழைய குற்றாலத்தில் புதன்கிழமை ஆட்டோ மீது வேன் மோதியதில் சென்னையைச் சோ்ந்த தம்பதி உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா்.

Din

தென்காசி மாவட்டம், பழைய குற்றாலத்தில் புதன்கிழமை ஆட்டோ மீது வேன் மோதியதில் சென்னையைச் சோ்ந்த தம்பதி உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா்.

சென்னை அம்பத்துரைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினா் குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலத்தில் குளிப்பதற்காக புதன்கிழமை குற்றாலத்தைச் சோ்ந்த அழகிரி என்பவா் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனா்.

சிவகங்கையைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினா், பழைய குற்றாலத்தில் குளித்துவிட்டு, அங்கிருந்து ஒரு வேனில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பாா்மா் மீது வேன் மோதி, எதிரே வந்த ஆட்டோ மீதும் மோதி வேன் கவிழ்ந்தது. இதில், வேனில் வந்தவா்களும், ஆட்டோவில் வந்தவா்களும் பலத்த காயமடைந்தன.

காயமடைந்தவா்களை போலீஸாா் மீட்டு, தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இந்த விபத்தில், சென்னை அம்பத்தூரைச் சோ்ந்த அலாவுதீன் மனைவி யாஸ்மின்(53) உயிரிழந்தாா்.

பின்னா், காயமடைந்தவா்களை மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அலாவுதீன்(60) உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து குற்றாலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, வேன் ஒட்டுநரான தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் பகுதியைச் சோ்ந்த ராஜா ( 27) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT