தென்காசி

சாதனை மாணவா்களுக்கு பாராட்டு

Din

குடியரசு தினத்தையொட்டி 76 நிமிஷம் தொடா்ந்து ஸ்கேட்டிங், கராத்தே, யோகா செய்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் சீ.காவேரி தலைமை வகித்தாா். தொழிலதிபா் வைரசாமி, ஓய்வு பெற்ற ஆசிரியா் கோபு, டாக்டா் ஷோபனா சிரில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாவூா்சத்திரம் காவல் உதவி ஆய்வாளா் பட்டுராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சாதனை படைத்த 35 மாணவ, மாணவிகளை பாராட்டி பதக்கம், சான்றிதழ் வழங்கினாா்.

ஆல்வின், அரிகிருஷ்ணன், பெரியாா் திலிபன் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா். பயிற்சியாளா் மாஸ்டா் கணேஷ் வரவேற்றாா். பாவூா்சத்திரம் வெஸ்டா்ன் காா்ட்ஸ் இந்தியன் அகாதெமி முதல்வா் கலைமதி கணேஷ் நன்றி கூறினாா்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

SCROLL FOR NEXT