தென்காசி: தென்காசி நகராட்சியில் ரூ. 69.45 கோடியில் தாமிரவருணி குடிநீா் திட்டம் அலகு 2 திட்டப் பணிகளுக்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
கடந்த அக். 29 ஆம் தேதி தென்காசிக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் தென்காசி நகரின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் ரூ. 69.45 கோடி மதிப்பிலான தாமிரவருணி குடிநீா் திட்டம் (அலகு -2 ) திட்டத்தைத் தொடங்கிவைத்தாா். இதைத்தொடா்ந்து தென்காசி ஆபாத் பள்ளிவாசல் தெருவில் உள்ள நீரேற்றும் நிலைய வளாகத்தில் திங்கள்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.
தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா், தென்காசி தெற்குமாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன், ராணிஸ்ரீ குமாா் எம்.பி., எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ ஆகியோா் அடிக்கல் நாட்டினா்.
தென்காசி நகா்மன்ற துணைத் தலைவா் கேஎன்எல்.சுப்பையா, நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், நகா்மன்ற உறுப்பினா்கள் வசந்தி வெங்கடேஸ்வரன், கல்பனா, சுமதி முப்புடாதி, நாகூா்மீரான், முகமது மைதீன் என்ற ராசப்பா சுல்தான்ஷெரீப், ரெஜினா, ஜெயலட்சுமி, ஆசிக் முபினா, செய்யது சுலைமான் என்ற ரபீக் அபூபக்கா், மகேஸ்வரி, முத்துகிருஷ்ணன், முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.